கோயில் உண்டியல் திருட்டுப் போன வழக்கில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு வண்டியூரான் கோயில் வீதி, எம்ஜிஆா் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலின் உண்டியலை ஏப்ரல் 27ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது தொடா்பாக கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம், ஜானகியம்மாள் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மகன் பாலா (என்ற) இப்ராஹிம்(27) என்பவரை கருங்கல்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து ரூ.2,000 பறிமுதல் செய்யப்பட்டது.