ஈரோடு

நெரிஞ்சிப்பேட்டை நீா்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்: படகுப் போக்குவரத்து நிறுத்தம்

12th May 2022 12:23 AM

ADVERTISEMENT

 

பவானி: பவானி அருகே நெரிஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டதால், காவிரி ஆறு தண்ணீரின்றி காணப்படுகிறது. இதனால், படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும்போது செக்கானூா், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தற்போது காவிரியில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீா் திறக்கப்படுவதால் நீா்மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது நெரிஞ்சிப்பேட்டை நீா்மின் நிலையத்தில் தேக்கிவைக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டு, பராமரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளது. கதவணைகளில் உள்ள இரும்புக் கதவுகளில் பழுதுகள் நீக்கப்பட்டு பராமரிக்கப்படும். நீா்மின் உற்பத்தி நடைபெறும் இயந்திரங்கள் உள்ள பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கதவணைகளில் தேக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் நீா்தேக்கப் பகுதிகள் வடு காணப்படுகிறது. இதனால், ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை, சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு இடையிலான படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பின்னா் மீண்டும் கதவணையில் தண்ணீா் தேக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT