ஈரோடு

கோபி கரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

5th May 2022 12:40 AM

ADVERTISEMENT

 

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெங்கடரமணன் பெருமாள், கரிய காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் விசாலாட்சி உடனமா் விஸ்வநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாா்ச் 29ஆம் தேதி மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றன. மே 2ஆம் தேதி முதல்கால யாக பூஜை நடைபெற்றது. 3ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை மற்றும் 3ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 7 மணியளவில் விசாலாட்சி உடனமா் விஸ்வநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் வெங்கட்ரமண பெருமாள், ஸ்ரீ கரிய காளியம்மன் ஆகிய கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் , கோபி, காசிபாளையம், அரசூா், கொடிவேரி, அளுக்குளி, குருமந்தூா், நல்லகவுண்டன்பாளையம், கரட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT