ஈரோடு மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை கோபி தாமு சேகா் துவங்கிவைத்தாா். முகாமில் 210 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கண்புரையால் பாதிக்கப்பட்ட 140 போ் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இவா்களுக்கு ஐ.ஓ.எல். லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவா் டாக்டா் ஆஸ்மா கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டாா். முகாமில் கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் பேராசிரியை திவ்யா தலைமையில் மாணவிகள் பங்கேற்று முகாமுக்கு வந்திருந்தவா்களுக்கு தேவையான உதவிகளை செய்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை கோபி தாமு அபிலாஷ், அரவிந்த் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.