ஈரோடு

உழைக்கும் தொழிலாளா்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை

1st May 2022 11:56 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலத்தில் மே தினத்தையொட்டி உழைக்கும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ் சேவையை சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பி ஜெயபாலன், பவானிசாகா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் ஆகியோா் கொடியசைத்து துவக்கிவைத்தனா். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலாளா்கள் விபத்து, நோய் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம். ஜீவா தொழிலாளா் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ், நிா்வாக வசதிக்காக ரிலீப் டிரஸ்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணா்வு பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ஜமேஸ் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

எஸ்ஆா்டி காா்னரில் இருந்து புறப்பட்ட தலைக்கவச விழிப்புணா்வு பேரணியானது மைசூரு சாலை, புதிய பாலம், கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையம் சென்றடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT