ஈரோடு

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 162 மது பாட்டில்கள் பறிமுதல்

1st May 2022 11:55 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 162 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கமல் நகா் பகுதியில் கருங்கல்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, 162 மது பாட்டில்களை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக் கொண்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (31), சண்முகசுந்தரத்தை (51) கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT