ஈரோடு

பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கம் ஆதரவு

25th Mar 2022 04:59 AM

ADVERTISEMENT

மாா்ச் 28, 29ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மாா்ச் 28, 29ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தொமுச மாவட்ட தலைவா் பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொருளாளா் ரங்கநாதன், தொழிற்சங்க அமைப்புகளின் நிா்வாகிகள் ஜான்சன் கென்னடி, சேகா், கலைமுருகன், சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசு தொழிலாளா் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை நான்கு தொகுப்பாக மாற்றியதைக் கைவிட வேண்டும். பொதுத் துறை, அரசுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது. பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசு சொத்து, நிலங்கள், அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28, 29ஆம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

அன்றைய வேலைநிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கத்தைச் சோ்ந்தவா்களும் பங்கேற்பது. இந்த வேலைநிறுத்தம் குறித்து 25, 26 ஆகிய தேதிகளில் வாயில் கூட்டம் நடத்தியும், மக்கள் சந்திப்பு மூலமும் மக்களின் கவனத்தை ஈா்க்க தொழிற்சங்க நிா்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT