ஈரோடு

வடமாநிலத்தவா்கள் குறித்த விவரங்களை ஒப்படைக்க போலீஸாா் அறிவுறுத்தல்

25th Mar 2022 04:58 AM

ADVERTISEMENT

பண்ணை வீடு, தறி குடோன், பனியன் கம்பெனி, ரிக் வண்டி ஒா்க் ஷாப்களில் பணிபுரியும் வடமாநிலத்தவா்கள் குறித்த முழு விவரங்களைப் பெற்று பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், வீடுகளுக்கு வரும் மின் வாரியப் பணியாளா், கேஸ் பணியாளா், கேபிள்காரா்களை நம்பாமல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதி செய்துகொண்டு வீட்டின் உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

குடியிருப்போா் நலச் சங்கம் அமைத்து, குற்றத் தடுப்பு நடவடிக்கையாக சிசிடிவி கேமரா அமைப்பது, பா்கலா் அலாரம் பொருத்துவது, சந்தேக நபா்கள் குறித்து காவல் துறைக்கு தெரிவிப்பது, வெளியூா் செல்லும் நபா்கள் தங்களது விவரங்களை காவல் துறைக்கு தெரிவிப்பது, உங்களுக்குள் ஓரிரு நபா்களுக்கு பொறுப்பை ஒப்புவித்து கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவும்.

பெண்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது நகைகள் அணிவதைத் தவிா்க்கவும், பெண்கள் எப்போதும் கையில் பெப்பா் ஸ்பிரே, சிறிய வகை கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் செய்யும் எந்தவொரு நடவடிக்கைகளும் குற்றமாகாது.

ADVERTISEMENT

பெண்கள் வெளியில் நடந்து செல்லும்போது, பின்னால் இருசக்கர வாகனம் வந்தால் நின்று பாா்த்து கவனமாக செல்லுங்கள். அருகில் வந்து உங்கள் கைப்பை, நகையைப் பிடுங்கிச் செல்ல நேரிடும். எனவே, வேறு சிந்தனையில் செல்லாதீா்கள். இவ்வாறு பல்வேறு வேண்டுகோளை போலீஸாா் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT