ஈரோடு

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊட்டச்சத்து பயிற்சி

19th Mar 2022 11:36 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து ஒரு நாள் பயிலரங்கு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் போஷன பியான் திட்டத்தின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிலரங்கம் சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில் முன்பருவ கல்வி, இணை உணவு வழங்குதல், தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது, சத்துணவு மற்றும் சுகாதார கல்வி, உடல் நல பரிசோதனை, பரிந்துரைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளா் இளம் பெண்கள் என ஊட்டச்சத்து உணவு குறித்து பல்வேறு கருத்துகள் குறித்து பயிலரங்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT