ஈரோடு

பெருந்துறையில் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா

19th Mar 2022 11:36 PM

ADVERTISEMENT

பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் சாா்பில் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மையத்தின் செயலாளா் விஜயா வரவேற்றாா்.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயலாளா் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். மையத்தின் ஆலோசகா் நல்லசாமி நன்றி கூறினாா். இதில், மையத்தின் செயற்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT