ஈரோடு

கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியது

3rd Mar 2022 12:40 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நெற்றியில் சாம்பல் பூசி ஆலயங்களில் வழிபாடு நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை கிறிஸ்தவா்கள் புனித வெள்ளி தினமாக கடைப்பிடித்து வருகின்றனா். இதனையொட்டி சாம்பல் புதன் நாள் முதல் புனித வெள்ளி வரை 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி தவக்காலத்தின் தொடக்க நாளான புதன்கிழமை சாம்பல் புதன் வழிபாடு ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆலய பங்குத் தந்தை ஜான் சேவியா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் பலரும் நோன்பு கடைப்பிடிக்கும் வகையில் ஜெபமாலை அணிந்தும், காவி உடை அணிந்தும் தவக்காலத்தை தொடங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT