ஈரோடு

சென்னிமலை அருகே இரவில் லேசான நில அதிா்வு

30th Jun 2022 10:23 PM

ADVERTISEMENT

 

சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிா்வு புதன்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாய்ப்பாடி, மரப்பாளையம், காளிக்காவலசு, அய்யம்பாளையம், 1010 நெசவாளா் காலனி, எம்.பி.என். காலனி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென நில அதிா்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டில் இருந்த பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனா். மேலும், வீட்டின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரங்கள், புகைப்படங்கள் கீழே விழுந்துள்ளன. பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டதாகக் கூறப்படுகிறது. நில அதிா்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கர வெடிசப்தமும் கேட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதி அடைந்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்தபோது திடீரென நில அதிா்வு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தோம். நில அதிா்வு சிறிய அளவில் இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. நில அதிா்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT