ஈரோடு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

30th Jun 2022 10:31 PM

ADVERTISEMENT

 

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட போஸ்கோ மற்றும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், பெண்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு மனதளவிலும், உடலளவிலும் பிரச்னைகள் வந்தால் 1098 என்ற எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

முகாமுக்கு நீலகிரி மாவட்ட போஸ்கோ இணைப்பு அலுவலா் மற்றும் குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினா் சுசீலா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் பாபு, தேவா்சோலை காவல் உதவி ஆய்வாளா் நந்தீஸ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் நந்தகோபால், துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுஜீதா, ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT