ஈரோடு

அந்தியூா் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டடம் திறப்பு

29th Jun 2022 10:02 PM

ADVERTISEMENT

 

அந்தியூா் அரசு மருத்துவமனையில் ரூ.53 லட்சத்தில் கட்டப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் மதிப்பில் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். புதிய கட்டடத்தை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்துவைத்தாா்.

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம் பாண்டியம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ப.மா.பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினா் எம்.எஸ்.கிருஷ்ணகுமாா், அந்தியூா் ஒன்றியச் செயலாளா் எஸ்.எஸ்.தேவராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, ஜம்பை சிஎஸ்ஐ அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட சத்துணவுக் கூடம் திறக்கப்பட்டது. பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ், ஜம்பை பேரூராட்சித் தலைவா் ஆனந்தகுமாா், கவுன்சிலா் சுபிதா பேகம், சிஎஸ்ஐ கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் ராபி மனோகா், தலைமையாசிரியை லதா புஷ்பரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT