ஈரோடு

அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

29th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட

செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவா்களுக்கு 16 விடுதிகளும், மாணவிகளுக்கு 11 விடுதிகளும் உள்ளன. கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவ, மாணவிகளுக்குத் தலா 4 விடுதிகள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரிக்கான விடுதிகளில் ஐடிஐ முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள்.

இவ்விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுவா். விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும். 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி உதவிகள் வழங்கப்படும்.

மலைப்பிரதேசங்களில் உள்ள விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை வாழ் தமிழா் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 30 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT