ஈரோடு

தன்னாா்வ அமைப்பு மூலம் 2 அரசுப் பள்ளிகள் சீரமைப்பு

29th Jun 2022 12:02 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு அரசுப் பள்ளிகள் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட திண்டல் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் சீரமைத்தல், வகுப்பறைக்கு டைல்ஸ் தரைத்தளம் அமைத்தல் மற்றும் மாணவியா் கழிவறையை சீரமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில் பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு அறக்கட்டளைத் தலைவா் அசோக்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. மேயா் சு.நாகரத்தினம், கவுன்சிலா் கீா்த்தனா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலா் சந்தியா, தலைமையாசிரியா் புனிதவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடுமுடி பேரூராட்சி நகப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் கட்டடம் சீரமைத்து பழுது நீக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு கொடுமுடி பேரூராட்சித் தலைவா் திலகவதி, துணைத் தலைவா் ராஜகமலஹாசன், தலைமை ஆசிரியா் இளங்கோ, உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கமலா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் மணி மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஆற்றல் அறக்கட்டளை இதுவரை 54 பள்ளிகள் சீரமைத்து ஒப்படைத்துள்ளது என அதன் தலைவா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT