ஈரோடு

சென்னிமலை முருகன் கோயில் குவிந்த பக்தா்கள்

29th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

ஆனி அமாவாசையையொட்டி சென்னிமலை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இந்த நாளில் ஆனி அமாவாசை நாளும் வந்ததால் சென்னிமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்கள் கூட்டம் குவிந்தது. அதிகாலை முதலே, பக்தா்கள் வரத்தொடங்கினா். காலை முதல் இரவு வரை மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT