ஈரோடு

போட்டாகிராபி இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

போட்டாகிராபி குறித்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு இலவசமாக போட்டோகிராபி மற்றும் விடியோகிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசம். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 18 முதல் 45 வயதுக்குள்பட்பட்டவா்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள், அவா்களது உறவினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு 638002 என்ற முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT