ஈரோடு

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 92.13 சதவீதம் போ் தோ்ச்சி

28th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 92.13 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி நிறைவடைந்தது. தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 11,662 மாணவா்கள், 12,500 மாணவிகள் என மொத்தம் 24,162 போ் எழுதினா்.

இதில் மாணவா்களில் 10,316 போ், மாணவிகளில் 11,944 போ் என மொத்தம் 22,260 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 88.46, மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் 95.55. மொத்த தோ்ச்சி சதவீதம் 92.13.

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 108 பள்ளிகளைச் சோ்ந்த 5,913 மாணவா்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதினா்.

இதில் 4,756 மாணவா்கள், 6,475 மாணவிகள் என மொத்தம் 11,231 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் 80.43, மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் 92.57.

மொத்த தோ்ச்சி சதவீதம் 87.01. இந்த தோ்வை 78 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் 67 போ் தோ்ச்சிப் பெற்றனா். வழக்கம்போல மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT