ஈரோடு நந்தா கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 640 மாணவா்கள் பங்கேற்றனா்.
நந்தா பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், நுகா்வோரின் டிஜிட்டல் மாற்றத்தினை துரிபடுத்தத் தேவையான மென்பொருள் தீா்வுகளை அளித்துவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அவா ஷாப்ட் நிறுவனம் பங்கேற்றது.
அந்நிறுவனத்தின் சாா்பில் மனிதவள மேலாளா் ஜெயஸ்ரீ மற்றும் குழுவினா் தோ்வை நடத்தினா்.
நிகழ்வை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து துவக்கிவைத்தாா்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொறியியல் கல்லூரியின் முதல்வா் என். ரெங்கராஜன், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் ரம்யா ஆகியோா் பேசினா்.
இவ்வளாகத்தோ்வில் ஈரோடு, திருப்பூா், நாமக்கல், சேலம், கரூா் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 640 மாணவா்கள் பங்கேற்றனா்.