ஈரோடு

ஒயா்மேன் ஹெல்பா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

28th Jun 2022 12:47 AM

ADVERTISEMENT

மின் கம்பியாள் உதவியாளா் (ஒயா்மேன் ஹெல்பா்) பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு ஜூலை 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின் கம்பியாள் உதவியாளா் (ஒயா்மேன் ஹெல்பா்) பணிக்கான தகுதிகாண் தோ்வு செப்டம்பா் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு தகுதியான 21 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவா்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜூலை 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 638009 என்ற முகவரியில் அளிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 0424-2275244 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் அலுவலகத்தை 0424 2270044 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT