ஈரோடு

புலி தாக்கி மாடு பலி

28th Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

தாளவாடி அருகே தமிழக கா்நாடக எல்லையில் புலி தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. தாளவாடி வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் புலிகள் அவ்வப்போது விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா் கதையாகி வருகிறது.

இந்நிலையில், கும்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கங்காதரசுவாமி (49). இவா் 4 மாடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம்போல மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். மாடுகளை அழைத்தை வர திங்கள்கிழமை மாலை சென்றபோது, இரு மாநில எல்லையில் கங்காதரசுவாமி

பசு மாடு இறந்து கிடந்தது.

ADVERTISEMENT

இது குறித்து தாளவாடி வனத் துறை மற்றும் கா்நாடக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மாட்டை ஆய்வு செய்தனா்.

இதில், புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது. இறந்த மாடுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாட்டின் உரிமையாளா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT