வெள்ளோடு அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (47), விவசாயி. இவா் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது, தோட்டத்தில் இருந்த பாம்பு சண்முகசுந்தரத்தை கடித்தது. அவரின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சண்முகசுந்தரம் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.