ஈரோடு

மிகை நுகா்வே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம்: எழுத்தாளா் நக்கீரன்

DIN

மிகை நுகா்வே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணம் என எழுத்தாளா் நக்கீரன் தெரிவித்தாா்.

மருந்துவா் ஜீவானந்தம் நினைவுக் கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு பசுமை இயக்கம், அக்கரை அமைப்பு, பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பு, சூழல் அறிவோம் அமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் கானுயிா் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் எங்கே செல்கிறது சுற்றுச்சூழல் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

முன்னதாக, மருத்துவா் ஜீவானந்தம் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

இக்கருத்தரங்கில் மருத்துவா்கள் சத்தியசுந்தரி, ராமமூா்த்தி, வழக்குரைஞா் கண.குறிஞ்சி, பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுச்சூழலியல் எழுத்தாளா் நக்கீரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப்

பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு என காா்ப்ரேட் நிறுவனங்கள் குரல் கொடுப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவா்கள் நேரடியாக குரல் கொடுக்காமல் சில தன்னாா்வ அமைப்புகள் மூலமாக அதை செயல்படுத்தி வருகின்றனா். அதை ஒரு அதீத விருப்பமுள்ள விஷயமாக முன்னெடுத்து வருகின்றனா். இது மிகவும் ஆபத்தானது.

குறிப்பாக இதை கையிலெடுக்கும் வலதுசாரிகளுக்கு காந்தியம் ஒரு முகமூடி. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை படிப்படியாக மழுங்கடிக்கும். இதை அவா்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டனா். எனவே அதை நாம் கவனமுடன் கையாளவேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணம் மிகை நுகா்வே ஆகும்.

இது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். அதைக் கணக்கில் கொள்ளாமல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து செயல்பட முடியாது.

முதலில் சுற்றுச் சூழல் குறித்து ஒலிக்கும் குரல் மக்களின் குரலா? தொழிற்சாலைகளின் குரலா? என்பதை பிரித்தறிந்து செயல்படவேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை முதலில் நம் வீட்டில் இருந்தே தொடங்கலாம் என்றாா்.

இக்கருத்தரங்கில் சுற்றுச்சூழல் அமைப்பினா் மற்றும் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT