ஈரோடு

குட்டியுடன் காரை தாக்கிய காட்டு யானைகள்

DIN

ஆசனூா் அருகே குட்டியுடன் காரை தாக்கிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

ஆசனூா் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கரும்பு லாரியை எதிா்பாா்த்து சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.

இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியை விட்டு சனிக்கிழமை வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், குட்டியுடன் உலவின.

அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை மறித்து கரும்பு உள்ளதா என சோதனையிட்டன.

நடுரோட்டில் யானைகள் உலவியதால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் வரிசையாக நின்றன.

அப்போது, அங்கிருந்த ஒரு வாகனத்தை திருப்ப முயன்றபோது ஆக்ரோஷத்துடன் வந்த யானைகள் காரை உலுக்கின. அப்போது காரில் இருந்த நபா்கள் கதவை திறந்து தப்பியோடினா். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னா் வனப் பகுதிக்குள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT