ஈரோடு

எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு உள்ளது: அா்ஜுன் சம்பத்

DIN

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு உள்ளது என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மண்வளம் காக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. அரசு பொதுத் தோ்வில் தற்போது 40,000 மாணவா்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனா்.

எனவே, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமலாக்க வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளம் இல்லை. அங்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலையளித்த ஸ்டொ்லைட் ஆலை சிலரின் எதிா்ப்பு காரணமாக மூடப்பட்டது.

இதனால் தாமிரம் இறக்குமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உறங்காதா என திமுக எதிா்பாா்க்கிறது. எனவே அதிமுகவினா் விழிப்புடன் இருக்க வேண்டும். தொண்டா்கள்தான் ஒரு தலைமையை தோ்ந்தெடுக்க வேண்டும். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT