ஈரோடு

சிறுத்தை தாக்கி மாடு பலி

DIN

சத்தியமங்கலம் அருகே பசுமாட்டு கன்று குட்டியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடித்துக் கொன்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீா்கடவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது விவசாயத் தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. விவசாயி சுப்புராஜ் தனது தோட்டத்தில் 11 மாடுகள் வளா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டின் முன்பு பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு வியாழக்கிழமை இரவு உறங்க சென்றாா்.

வெள்ளிக்கிழமை எழுந்து பாா்த்தபோது கன்று குட்டி ஒன்று ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து உடனடியாக பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்ததால் இழப்பீடு வழங்குவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகளை தொடா்ந்து வேட்டையாடுவதாகவும், எனவே, சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT