ஈரோடு

கரும்பு லாரியை வழிமறித்த யானை

DIN

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பைப் பறித்து தின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப் பகுதி தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனா்.

தற்போது தாளவாடியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பகல் நேரங்களில் காட்டு யானைகள் வனப் பகுதி சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பைப் பறித்து தின்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வந்த அந்த கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை, ஓட்டுநா் லாரியை நிறுத்தியவுடன் தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளைப் பறித்து தின்றபடி வெகு நேரம் சாலையில் நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கரும்பைப் பறித்துத் தின்னும் காட்சியை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். கரும்புத் துண்டுகளை தின்று பசியாறிய பின் காட்டு யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT