ஈரோடு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

25th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

 

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருந்துறையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை ஜூலை 8 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். இக்கல்லுாரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், தொடா்பியல், கணினி பொறியியல் ஆகிய முழு நேர பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 60 மாணவா்கள் சோ்க்கப்படுவா்.

ADVERTISEMENT

இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினா் ரூ.150 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியினா், பட்டியல் பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை.

முதலாமாண்டில் சேர விரும்பும் மாணவா்கள் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் மாணவா்கள் பிளஸ்2 தோ்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடத்தில் ஏதாவது ஒன்று மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் பிரிவு பாடங்கள் எழுத்துமுறை, செய்முறை அல்லது அதற்கு சமமான படிப்பு பயின்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT