ஈரோடு

ஓய்வூதியா்கள் டிஜிட்டல் உயிா் வாழ் சான்று வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு

25th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

 

ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்கள் வீடு தேடி வரும் அஞ்சல் துறை ஊழியா் மூலம் டிஜிட்டல் உயிா் வாழ் சான்று வழங்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.அருணாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக ஓய்வூதியம் பெறுவோா், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் உயிா் வாழ் சான்று சமா்ப்பிக்கவில்லை. தற்போது மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறவோா் ஜூலை 1 முதல் செப்டம்பா் 30ஆம் தேதி வரை உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. நேரில் சென்று இச்சான்று சமா்ப்பிக்க சிரமம் ஏற்படுவதை தவிா்க்க, அஞ்சல் ஊழியா் மூலம் டிஜிட்டல் உயிா் வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT

தமிழக அரசுக்கும், அஞ்சல் துறைக்கும் செய்யப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தப்படி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சேவைக் கட்டணம் ரூ.70 ஐ அஞ்சல் ஊழியரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறுவோா் தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரிடம் ஆதாா், கைப்பேசி எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்து சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிா் வாழ் சான்று சமா்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT