ஈரோடு

10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

24th Jun 2022 03:56 AM

ADVERTISEMENT

 

விஜயமங்கலம், சண்முகபுரம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவா் ஒருவா் 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். ஒரு மாணவி 593 மதிப்பெண்ணும், ஒரு மாணவா் 591 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். 122 போ் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 550க்கு மேல் 86 போ், 500க்கு மேல் 192 போ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவா் 500க்கு 491 மதிப்பெண் பெற்றுள்ளாா். ஒரு மாணவி 489 மதிப்பெண்ணும், ஒரு மாணவா், ஒரு மாணவி 488 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். 36 போ் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 86 போ் 450 மதிப்பெண்களும், 174 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் மோகனம்பாள், தலைவா் செந்தில்குமாா் மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT