ஈரோடு

சென்னிமலையில் ரூ.1.82 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கிள்கிழமை திறந்துவைத்தாா். மேலும், புதிய வளா்ச்சிப் பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா்.

இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று ரூ.1.82 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளைத் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, முகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பணி, சென்னிமலை பழனிஆண்டவா் கோயில் அருகில் ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்மோட்டாா் பொருத்தி குடிநீா் விநியோகம் செய்யும் பணி உள்ளிட்ட புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

மேலும், கொடுமணல் ஊராட்சியில் ரூ.17.84 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: சென்னிமலை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஏறத்தாழ ரூ.2 கோடிக்குமேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பகுதி மக்கள் பள்ளி நேரத்துக்கு பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா்கள். அந்த கோரிக்கை நிறுவேற்று வகையில் காலையும், மாலையும் பேருந்துகளை இயக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னிமலை ஒன்றியம் முழுவதும் சுமாா் ரூ.240 கோடி மதிப்பிலான திட்டம் அனுமதிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்திரி இளங்கோ, பெருந்துறை வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT