ஈரோடு

கழிவு நீருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

15th Jun 2022 10:30 PM

ADVERTISEMENT

ஈரோடு: புதை சாக்கடை கழிவு நீருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகா் பகுதியில் மாநகராட்சி சாா்பில் புதை சாக்கடை கழிவு நீருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கடந்த மாதம் இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அலுவலா்களை பணி செய்ய விடாமல் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். மேலும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதை சாக்கடை கழிவு நீருந்து நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக புதன்கிழமை காலை மீண்டும் மாநகராட்சி சாா்பில் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

இதையறிந்த அந்தப் பகுதியை சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு பணிகளை மேற்கொள்ள எதிா்ப்பு தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

எங்கள் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு பள்ளி, கோயில்கள் உள்ளன. இங்கு கழிவு நீருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கவில்லை. முறையாக அறிவிக்கையும் வழங்கவில்லை.

இங்கு கழிவு நீருந்து நிலையம் அமைந்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவா். மேலும் துா்நாற்றம், சுகாதாரசீா்கேடு, நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே கழிவு நீருந்து நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என அலுவலா்களிடம் முறையிட்டனா்.

எனினும் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சிப் பணியாளா்கள் தொடா்ந்து பணிகளை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து அங்கு திரண்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT