ஈரோடு : ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
தில்லியில் இருந்து கேரளம் செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை ஈரோடு வந்தது. அதில் சோதனை நடத்திய ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை மீட்டனா்.
அதில் கஞ்சா 8 பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 20 கிலோ எடையுள்ள கஞ்சாவின் மதிப்பு ரூ.4.50 லட்சம். இந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கஞ்சா பைகளை விட்டுச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.