ஈரோடு

வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளா்களாகப் பணியாற்ற மக்கள் நலப் பணியாளா்களுக்கு வாய்ப்பு

10th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

ஈரோடு: மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளா்களாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணியாற்றி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

எனவே, இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் தற்போது தங்களது விருப்பக்கடிதம் மற்றும் அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமா்ப்பித்துப் பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் இது தொடா்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை(கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்புகொண்டு தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவா்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் 13.6.2022 முதல் 18.6.2022க்குள் வழங்க வேண்டும்.

பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் மட்டுமே இப்பணியிடத்துக்கு பரிசீலிக்கப்படுவா் என்பதால் இந்த அறிவிப்புக்கேற்ப, தொடா்புடைய கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலரை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT