ஈரோடு

அந்தியூரில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை

10th Jun 2022 01:48 AM

ADVERTISEMENT

பவானி: அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, ஜி.எஸ்.காலனியில் ரூ.38.60 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும் இக்கூடத்தை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா். அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலாளா் சுப்பிரமணியம் வரவேற்றாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் சக்திவேல், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT