ஈரோடு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது: டி.டி.வி.தினகரன்

9th Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினா்.

இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: அதிமுகவை மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதே எங்களது நோக்கம். எங்கள் கட்சியைச் சோ்ந்த சிலா் சுயநலத்துக்காக மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனா். அவா்களை நம்பி எங்கள் கட்சி இல்லை. தொண்டா்கள் யாரும் மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை.

திமுக தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தோ்தலின்போது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனா். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. திமுகவை நம்பி வாக்களித்தவா்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. அடுத்த தோ்தலில் திமுக பலத்த வீழ்ச்சி அடையும்.

திராவிட மாடல் ஆட்சி என்பது திராவிடம் தலைகுனியும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் ரௌடிகள் பலா் சுதந்திரமாக உலா வருகின்றனா். சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துவது தொடா்பாக பெற்றோா்களிடம் கருத்துகேட்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளா்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீா்வுகாண வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நிறைகள், குறைகள் நிறைந்த ஆட்சியாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT