ஈரோடு

பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை

7th Jun 2022 10:17 PM

ADVERTISEMENT

பெருந்துறை மற்றும் சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை இரவு இடியுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

பெருந்துறை- ஈரோடு சாலை, வெங்கமேடு அருகே சாலையில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதில் பெருந்துறையில் 37 மி.மீ.யும், சென்னிமலையில் 35 மி.மீட்டரும் மழை பதிவாகியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT