பெருந்துறை அருகே வீடு புகுந்து திருட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், சீலம்பட்டியைச் சோ்ந்தவா் அம்மணி (65). இவா் செவ்வாய்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்தாா்.
அப்போது, வீட்டுக்குள் அடையாளம் தெரியாத பெண் ஒருவா் நுழைந்துள்ளாா். இதனைப் பாா்த்த அம்மணி சப்தம் போடவே அக்கம்பக்கத்தினா் வந்து அந்தப் பெண்ணை பிடித்து பெருந்துறை போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், பிடிபட்டவா் கருமாண்டிசெல்லிபாளையம், வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்த ராணி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருட முயன்ற அவரை போலீஸாா் கைது செய்தனா்.