பெருந்துறை சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.
பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கின. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
திடீா் மழை பெய்ததால் பெருந்துறை, சென்னிமலை பகுதியில் இதனமான காலநிலை நிலவியது.