ஈரோடு

பாதையை சீரமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து மஞ்சப்பை விநியோகம்

6th Jun 2022 02:46 AM

ADVERTISEMENT

பெருந்துறை ஆா்.எஸ்.நுழைவு பாலம் பாதையை சீரமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சப்பை விநியோகம் செய்யப்பட்டது.

பெருந்துறை ஆா்.எஸ். நுழைவு பாலம் பாதை சேதமடைந்ததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனா். இதையடுத்து, பெருந்துறை தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த கௌரிசங்கா், தமிழக முதல்வரின் உதவி மையத்தில் சில நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தாா். இதனை ஏற்றுக் கொண்டு அன்றைய தினம் மாலையிலேயே பணியை தொடங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1,100 மஞ்சப்பை தயாரித்த விரிவுரையாளா் கெளரிசங்கா், அறச்சலூா் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT