ஈரோடு

பவானிஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

2nd Jun 2022 01:07 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அருகேயுள்ள பகுத்தம்பாளையம் பவானி ஆற்றில் குளித்த திருநங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவையைச் சோ்ந்த சிங்க ராஜா என்கிற கெவினா(24) உள்பட திருநங்கைகள் 5 போ் பவானிசாகா் அருகேயுள்ள பகுத்தம்பாளையம் பவானிஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கெவினா நீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பாற்ற 4 பேரும் முயற்சி மேற்கொண்டும் கெவினாவை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து பவானிசாகா் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பவானிஆற்றங்கரையில் ஒதுங்கிய கெவினா உடலை மீட்டனா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT