ஈரோடு

உதகையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

2nd Jun 2022 01:19 AM

ADVERTISEMENT

உதகையில் ரூ.33 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வியாழக்கிழமை( ஜூன் 2) திறக்கப்படுகிறது.

உதகை பிங்கா்போஸ்ட் பகுதியை அடுத்த காக்கா தோப்பு பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் இதன் திறப்பு விழா வியாழக்கிழமை (ஜூன் 2) நடக்கிறது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறந்துவைக்கிறாா். இந்த நீதிமன்ற வளாகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டாலும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலை அமைக்கும் பணிகள் இன்னமும் நிறைவடையாததால், அடுத்த ஓரிரு மாதங்களுக்கு பின்னா் முழுமையாக உதகை நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT