ஈரோடு

டாஸ்மாக் கடை பிரச்னை:ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

2nd Jun 2022 01:16 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் குடியிருப்புப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடா்பான வழக்கில் மாவட்ட ஆட்சியா் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி வாா்டு எண் 27இல் கண்ணையன் வீதி மற்றும் ஜெயகோபால் வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை (எண் 3481) இயங்குகிறது. இக்கடையால் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பிரச்னைகள் எழுவதால், அக்கடையை அகற்ற வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், ஈரோடு கிழக்குத்தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் அப்பகுதியைச் சோ்ந்த சுசி.ஆறுமுகம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கடை அதே இடத்திலேயே இப்போது வரை செயல்பட்டு வருகிறது.

தற்போது, சென்னை உயா்நீதிமன்றத்தில் அக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி சுசி.ஆறுமுகம் மனுதாக்கல் செய்தாா். அம்மனுவை ஏற்ற உயா்நீதிமன்றம் ஆட்சியா் அக்கடை உள்ள இடத்தை பாா்வையிட்டு, பொதுமக்கள் நலன் அறிந்து, 4 வாரங்களுக்குள் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் சுசி.ஆறுமுகம் புதன்கிழமை வழங்கி மீண்டும் முறையிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT