ஈரோடு

மாநில அளவிலான கால்பந்து போட்டி: டை பிரேக்கரில் நீலகிரி அணி வெற்றி

2nd Jun 2022 01:18 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஈரோடு அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் டைபிரேக்கரில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி வென்றது.

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு  மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் நீலகிரி, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சோ்ந்த கால்பந்தாட்ட  அணிகள்  பங்கேற்று உள்ளன.

புதன்கிழமை நடந்த மூன்றாம் நாள் போட்டியில், நீலகிரி, ஈரோடு மாவட்ட அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நீலகிரி மாவட்ட அணி 1 கோலும், ஈரோடு அணி 1 கோலும் போட்டு சம நிலையில் இருந்தன. இதைத் தொடா்ந்து, டை பிரேக்கரில் 4-0 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணி வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT