ஈரோடு

தமிழ்நாடு கிராம வங்கி சத்தியமங்கலம் கிளை இடமாற்றம்

27th Jul 2022 10:21 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு கிராம வங்கியின் சத்தியமங்கலம் கிளை இடமாற்றம் செய்யப்பட்ட விழா அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கி சத்தியமங்கலம் கிளை கோட்டுவீராம்பாளையத்தில் செயல்பட்டு வந்தது. இந்த கிளை சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் எதிரில் உள்ள கட்டடத்துக்கு இடமாற்றப்பட்டது. இதற்கான திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சத்தியமங்கலம் உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெயபாலன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தாா். சிறப்பு விருந்தினராக

பண்ணாரி அம்மன் சுகா் லிமிடெட் பொது மேலாளா் சி.இராதாகிருஷ்ணன், துணை பொது மேலாளா் டி.பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா். தமிழ்நாடு கிராம வங்கி சத்தியமங்கலம் கிளை மேலாளா் எல்.இராமகிருஷ்ணன் வரவேற்றாா். கோவை மண்டல மேலாளா் டேவிட் விஜயகுமாா், துணை மண்டல மேலாளா் வெங்கடரமணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

காசாளா் ஆனந்த சதீஷ் நன்றி கூறினாா். இதில், தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை மேலாளா்கள், மண்டல அலுவலகப் பணியாளா்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT