ஈரோடு

காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே காரை துரத்திய யானை

27th Jul 2022 10:30 PM

ADVERTISEMENT

 

காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே காரை யானை துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு பயணிக்கின்றன. ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. தற்போது இரவு 9 மணிக்கு மேல் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் சாம்ராஜ் நகரில் இருந்து கோவை நோக்கி காா் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒற்றை யானை கரும்புத் துண்டுகளை சாப்பிட்டபடி நின்று கொண்டிருந்தது. காா் மெதுவாக அதனருகே சென்றபோது உண்ண இடையூறு செய்வதாக கருதிய யானை, காரை துரத்தியது. அப்போது காரில் இருந்த குழந்தைகள், பெண்கள் அச்சத்தில் சப்தமிட்டனா். ஓட்டுநா் வேகமாக காரை பின்னோக்கி இயக்கி தப்பினா். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT