ஈரோடு

ஆடி அமாவாசை: பூக்கள் விலை உயா்வு

27th Jul 2022 10:23 PM

ADVERTISEMENT

 

ஆடி அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ. 1400க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலா்கள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. வியாழக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் விசேஷங்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் கிலோ ரூ.550க்கு விற்பனையான மல்லிகைப் பூ புதன்கிழமை விலை உயா்ந்து கிலோ ரூ.1400க்கு விற்பனையானது. இதனால் மல்லிகை பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல செண்டுமல்லி கிலோ ரூ.85க்கும், கோழிக்கொண்டை ரூ.66க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ.180க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT