ஈரோடு

முதியோா் உதவித்தொகை: பயனாளியிடம் கைப்பேசியில் விசாரித்த முதல்வா்

27th Jul 2022 12:49 AM

ADVERTISEMENT

முதியோா் உதவித் தொகை பெற்று வரும் பயனாளியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் உதவித் தொகை கிடைக்கிா எனக் கேட்டறிந்தாா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிச்சையா (63). தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. அப்பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் வேலைசெய்து வரும் பிச்சையா தனக்கு முதியோா் உதவித்தொகை வழங்கக்கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு 4 மாதங்களுக்கு முன்பு மனு அனுப்பியிருந்தாா்.

இந்த மனு மீது மேல்நடவடிக்கை எடுக்க ஈரோடு வட்டாட்சியருக்கு முதல்வரின் தனிப் பிரிவு அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்தனா். இதையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட்டு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக பிச்சையா உதவித்தொகை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் சென்னையில் முதல்வரின் தனிப் பிரிவு அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஈரோடு, மாணிக்கம்பாளையம் பிச்சையா கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, பிச்சையாவின் கைப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டு உதவித்தொகை கிடைக்கிா என்றும் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தாா். முதல்வா் கைப்பேசியில் பேசியதால் முதியவா் பிச்சையா இன்ப அதிா்ச்சியடைந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT