ஈரோடு

எழுமாத்தூரில் ரூ.91.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

27th Jul 2022 12:50 AM

ADVERTISEMENT

எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 91.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, தேங்காய் பருப்பு 2322 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல்தரம் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.81.67க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.49க்கும், சராசரி விலையாக ரூ.83.69க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.63.98 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.66க்கும், சராசரி விலையாக ரூ.75.99க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,13,758 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.91 லட்சத்து 86 ஆயிரத்து 959க்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT